மங்களூரில் வெளுத்துக் கட்டிய கனமழை - தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..

Update: 2025-06-15 04:31 GMT

கர்நாடக மாநிலம் மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது. ரெட் அலர்ட்டை தொடர்ந்து கடலோர கர்நாடகா, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, மங்களூரு நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. குடியிருப்புகளை சுற்றி குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். பெரும்பாலான சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்