போலீஸ் குடியிருப்புக்குள் கைவரிசை- பெண் காவலர் வீட்டில் கொள்ளை-திருச்சியில் ஷாக்
திருச்சி அருகே காவலர் குடியிருப்பில் உள்ள பெண் காவலர் வீட்டில் 4 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருச்சி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் யுவராணி என்பவர் கே.கே. நகர் காவல் துறை குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் நான்கு சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து யுவராணி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் குடியிருப்பிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.