``பேர பசங்களா இங்க வாங்க.. தாத்தா ஒரு GIFT வச்சிருக்கேன்’’ - வைரலாகும் வீடியோ
இந்த ஆண்டு இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்த சந்திப்பில், கடந்த ஜனவரி மாதம், தான் அமெரிக்க பயணம் மேற்கொண்டதையும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியதையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். அந்த சந்திப்பு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பிற்கு பாதை வகுத்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். மேலும், இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் கலந்துரையாடினர். வர்த்தக ஒப்பந்தங்கள், எரிசக்தி பாதுகாப்பு, பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.