"கிராண்ட் மாஸ்டர்" திவ்யா தேஷ்முக்-க்கு உற்சாக வரவேற்பு
ஃபிடே (FIDE ) மகளிர் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று "கிராண்ட் மாஸ்டர்" அந்தஸ்து பெற்ற19 வயதான திவ்யா தேஷ்முக் இந்தியா வந்தடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விமான நிலையத்தில் அவரை வரவேற்க குடும்பத்தினர் உள்ளிட்டோர் திரண்டனர். இந்த உற்சாக வரவேற்புக்கு மத்தியில் திவ்யா தேஷ்முக் வீடு திரும்பினார்.