கஞ்சா வழக்கு...பிரபல நடிகருக்கு பறந்த கலால்துறை போலீஸ் நோட்டீஸ்

Update: 2025-04-23 13:40 GMT

உயர்ரக கஞ்சா வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் விசாரணை நடத்த கலால்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 4ம் தேதி கலால் துறை போலீசார் நடத்திய சோதனையில், சென்னையில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த கிறிஸ்டினா என்ற தஸ்லீமா சுல்தானா மற்றும் மண்ணஞ்சேரி பிரோஸ் ஆகிய இருவர், 2 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ உயர்ரக கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர். தஸ்லீமாவின் செல்போனில் காணப்பட்ட வாட்ஸ் அப் சாட் தொடர்பாக விசாரணை நடத்த நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் ஆஜராக கலால் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஷைன் டாம் சாக்கோவுடன் ஒன்றாக அமர்ந்து கஞ்சா புகைத்ததாக போலீசாரின் விசாரணையின் போது தஸ்லீமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்