tirupati temple scam || திருப்பதியில் மோசடி - நாட்டிய கலைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-06-28 03:14 GMT

திருப்பதியில் நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்ற இலவசமாக அனுமதி பெற்ற நிலையில், கலைஞர்கள் 2 ஆயிரம் பேரிடம், தலா 2 ஆயிரம் ரூபாய் வசூல் செய்த அகாடமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த அன்னமாச்சாரியார் அகாடமி என்ற அமைப்பு தேவஸ்தானத்திடமிருந்து ஆறு மாதங்களுக்கு முன் இலவசமாக அனுமதி பெற்றுள்ளது. ஆனால், நாட்டிய கலைஞர்களிடம் தலைக்கு 2 ஆயிரம் வீதம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த தேவஸ்தான நிர்வாகம், அனுமதியை ரத்து செய்த நிலையில், நீதிமன்றம் மூலம் அரங்கேற்றம் செய்ய அனுமதி பெற்றுள்ளனர். இந்நிலையில், பணம் செலுத்தியிருந்த 2000 பேரும் திருப்பதிக்கு வந்த நிலையில், தேவஸ்தான நிர்வாகம் 600 பேரை மட்டுமே ஆஸ்தான மண்டபத்திற்குள் செல்ல அனுமதிப்போம் என்று கறார் காட்டியதால், நடந்தது ஏதும் தெரியாமல் கலைஞர்கள் தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். இதனிடையே, அன்னமாச்சாரியார் அகாடமி நிர்வாகியை அழைத்துச் சென்று தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்...

Tags:    

மேலும் செய்திகள்