வரலாற்றில் முதல்முறை..ஒரேநாளில் 2 போர்க்கப்பல்களை இறக்கி எதிரிகளை அலறவிட்ட இந்தியா
ஒரேநாளில் 2 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
ஒரே நாளில் இரண்டு நவீன போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. , பிராஜெக்ட் 17A' திட்டத்தின் கீழ் ஐ.என்.எஸ். ஹிம்கிரி மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி என இரண்டு நவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டன.
விசாகப்பட்டினத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 75 சதவீதம் இந்திய உள்நாட்டு உபகரணங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பல்கள், தற்சார்பு இந்தியா நோக்குக்கு வலுவூட்டும் வகையில் உருவாகியுள்ளன. இந்திய கடற்படையில் ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் இணைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.