foodorder | kerala ஆர்டர் கொண்டுவர தாமதம் கஸ்டமர் செய்த கொடூர செயல் பதற வைக்கும் CCTV காட்சி

Update: 2025-08-10 08:26 GMT

கேரளாவில் உணவு தர தாமதித்த உணவக ஊழியர்கள் மீது கார் ஏற்றிக்கொல்ல முயன்ற சம்பவத்தின் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.

மலப்புரம் - கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீமும், அவரது நண்பரும் அப்பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்ற நிலையில்,

அங்குள்ள பணியாளர்கள் உணவு தர தாமதித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்துல் ஹக்கீம், வேலை முடிந்து நின்று கொண்டிருந்த உணவக ஊழியர்கள் மீது காரை வைத்து ஏற்ற முயன்றார். இதில் அனைவரும் ஓடி உயிர்தப்பிய நிலையில் ஒருவர் மட்டும் காயமடைந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்துல் ஹக்கீம் மற்றும் அவரது நண்பர் நிஜாமுதீன் ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்