கிரிப்டோ கரன்ஸி மோசடியில் ஈடுப்பட்ட வழக்கில் நடிகைகளிடம் விசாரணை நடத்த உள்ளதாக புதுச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர். அஷ்பே என்ற கிரிப்டோ கரன்சி முதலீட்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் கலந்து கொண்டனர், இதனை நம்பி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அசோகன் என்பவர் முதலீடு செய்து பணத்தை இழந்தார். இந்த வழக்கில் புதுவை சைபர் க்ரைம் போலீசார் ஏற்கனவே கோயம்புத்தூரை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சையது உஸ்மானை கைது செய்து சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், விளம்பரத்தில் நடித்த நடிகைகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.