Dulquer Salaman Car Case | சிக்கிய ஆதாரம்? அதிர்ச்சியில் இந்திய ஆர்மி - சிக்கும் துல்கர் சல்மான்?
துல்கர் சல்மான் காரை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு
நடிகர் துல்கர் சல்மானின் டிஃபன்டர் காரை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு, சுங்கத்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பூட்டான் நாட்டில் இருந்து உயர்ரக சொகுசு கார்கள் சட்ட விரோதமாக இந்தியாவிற்கு கடத்தப்பட்டு பிரபல நபர்கள் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கேரளாவில் பிரபல நடிகர்களான மம்முட்டி, துல்கர் சல்மான் உள்ளிட்டோரிடம் இருந்து உயர் ரக கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால், முறையாக அனைத்து வரிகளையும் செலுத்தி, உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை திரும்ப ஒப்படைக்க சுங்கத்துறையிடம் அறிவுறுத்துமாறும் துல்கர் சல்மான் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.