எஜமானை காப்பாற்ற கடைசி நொடி வரை போராடி உயிரை விட்ட நாய்.. சோகத்தில் முடிந்த பாசப்போராட்டம்
கேரளாவில் எஜமானை காப்பாற்ற கொடிய விஷம் கொண்ட பாம்பை கடித்து கொன்ற ராட்வீலர் வகை வளர்ப்பு நாய் இறுதியில் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் முகவூர் பகுதியை சேர்ந்த ராமன்உண்ணி , வீட்டின் அருகே வாழை மரக்கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது அருகே கொடிய விஷம்கொண்ட 6 நீளம் கொண்ட பாம்பு ஒன்று வந்ததை பார்த்த வளர்ப்பு நாய் 'ஷாக்கி' நீண்ட நேரம் போராடி அந்த பாம்பைக் கடித்துக் கொன்று விட்டு மயங்கி விழுந்துள்ளது.
நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நாய் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.