பீகார் துணை முதல்வரே 2 வோட்டர் ஐடி வச்சிருக்காரா? - நாடு முழுக்க வெடிக்கும் பூதாகரம்

Update: 2025-08-11 09:25 GMT

2 வாக்காளர் அட்டை விவகாரத்தில் பீகார் துணை முதல்வருக்கு ஆட்சியர் கடிதம்

பீகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம், பாட்னா மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டுள்ளார்...

பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறும் சூழலில், பீகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, இரண்டு வாக்காளர் அடையாள அட்டையை வைத்துள்ளதாக, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், பீகார் துணை முதல்வருக்கு, பாட்னா மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார். சின்ஹாவின் பெயர் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்