``மகாபாரத காலத்திலே இந்தியாவில் ட்ரோன், ஏவுகணைகள்’’ - சொன்னது யாருனு தெரியுமா?
ரைட் சகோதரர்களுக்கு முன் இந்தியாவில் விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் கருத்து
ரைட் சகோதரர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ‘புஷ்பக் விமானம்‘ இருந்தது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் கூறியுள்ளார். போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களிடையே பேசிய அவர், மகாபாரத காலத்திலேயே ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஜான் டால்டனுக்கு முன்பே மகரிஷிகள் அணுக்கோட்பாட்டை முன்வைத்தாகவும் குறிப்பிட்டார்.