டெல்லி முதலமைச்சர் அதிஷியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியினர், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுவது போன்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.