Delhi Car Blast Latest | டெல்லி பயங்கரம்.. ஒவ்வொரு நொடியும் திக்..திக்..

Update: 2025-11-11 03:18 GMT

டெல்லி வாகன வெடிப்பு - அமித்ஷா உடன் பிரதமர் மோடி பேச்சு டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழ்நதனர். சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அமைப்புகள் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான தகவல்களை ஒவ்வொரு நிமிடமும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பகிர்ந்து வருவதாக டெல்லி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அதே போல அமித்ஷாவிடம் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆறுதல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்ற பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்