#JUSTIN || Nellai | இருட்டுக்கடை விவகாரம் - நயன் சிங்கிடம் நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை

Update: 2025-05-15 09:16 GMT

இருட்டுக்கடை விவகாரம் - நயன் சிங்கிடம் விசாரணை

இருட்டுக்கடை உரிமை விவகாரம் தொடர்பாக நயன் சிங் நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜர்

இருட்டுக்கடையின் தற்போதைய உரிமையாளர் கவிதா சிங்கின் சகோதரர் நயன் சிங், கடை தனக்கு தான் சொந்தம் என்பதற்கான உயில் இருப்பதாக அறிவித்தார்

நயன் சிங்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இருட்டுக் கடையை அபகரிக்க முயற்சிப்பதாக கவிதா சிங் பொது அறிவிப்பை வெளியிட்டார்

நயன் சிங்கிடம் இருப்பது போலி உயில் என நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவிதா சிங் புகார் அளித்திருந்தார்

கவிதா சிங் அளித்த புகாரின் பேரில், நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் நயன் சிங் ஆஜர் - அரை மணிநேரம் விசாரணை

தன்னிடம் இருக்கும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என நயன் சிங் திட்டவட்டம்

Tags:    

மேலும் செய்திகள்