கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சமையல் எண்ணெய்க்கான தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இந்தியா இறக்குமதி செய்கிறது.
சுங்க வரி குறைப்பு நடவடிக்கை மூலம் சமையல் எண்ணெய் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.