இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் கனமழையால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் காவல் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டிடங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்த நிலையில், மூன்று கிராமங்களுக்கு போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகியவை துண்டிக்கப்படுள்ளன. மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன