ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வசிக்கும் கேரள மக்கள் நடனமாடி மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடினர். இதற்காக கோவை சாய்பாபா காலனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், மலையாள மக்கள் உற்சாகமாக திரண்டனர். அத்தப்பூ கோலம் போட்டு, பாரம்பரிய உடைகள் அணிந்து, நடனம், இசை, பாடல்களுடன் பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடினர்.