ஒடிசாவில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு பிஜு ஜனதா தளம் கட்சியினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். அப்போது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.