சித்திரை திருவிழா.. வைகையில் இறங்கிய கள்ளழகர் - குலுங்கிய மதுரை

Update: 2025-05-13 01:51 GMT

மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் விண்ணதிரும் பக்தி கோஷங்களுடன் கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முன்னதாக கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரையில் வைகையாறு நோக்கி வந்த கள்ளழகரை பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்