உத்தர பிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியில் சீன மாஞ்சா நூலினால் பெண்ணின் கழுத்து அறுபட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொரதாபாத் மஜோலா குஷல்பூர் காவல் நிலையம், பேங்க் காலனியில் வசிக்கும் வங்கி மேலாளரான கோமல், தனது இருசக்கர வாகனத்தில் காஷிராம் கேட் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பட்டம் விடுவதற்காக பயன்படுத்தப்பட்ட சீன மாஞ்சா நூல் அவரது கழுத்தில் சிக்கியுள்ளது. உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோமலின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.