Open AI நிறுவனத்தை விலைபேசிய எலான் மஸ்குக்கு, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் பதிலடி கொடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கோலோச்சி வரும் Open AI நிறுவனத்தை, 97.4 பில்லியன் டாலருக்கு வாங்க தயாராக இருப்பதாக, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக, எக்ஸ் தளத்தில் No Thanks என்று பதிவிட்ட சாம் ஆல்ட்மேன், வேண்டுமானால் ட்விட்டர் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.