ஃபேஸ்புக், இன்ஸ்டா Password-ஐ உடனே மாத்துங்க - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2025-06-21 07:15 GMT

கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டா, டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் 16 பில்லியன் பயனர் தரவுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கொண்ட பெரிய தரவுதளத்தை கண்டறிந்ததாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இல்லாத மிகப்பெரிய தரவு மீறல் என்றும் கூறியுள்ளனர். பாஸ்வோர்டை உடனடியாக மாற்றுவதே இதற்கு தீர்வு என்றும் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு பாஸ்வேர்டை பல தளங்கள் அல்லது கணக்குகளில் பயன்படுத்தி வரும் பட்சத்தில், அவற்றை மாற்றலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்