BR Gawai | வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இடைநீக்கம் - பார் கவுன்சில் நடவடிக்கை
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீசி தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இடை நீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது அதிகாரசபையிலும் ஆஜராவது, செயல்படுவது, வாதிடுவது உள்ளிட்டவற்றில் இருந்து ராகேஷ் கிஷோர் தடை செய்யப்பட்டுள்ளார். மேலும், ராகேஷ் கிஷோர் மீது ஒழுங்கு நடவடிக்கையையும் இந்திய பார் கவுன்சில் மேற்கொண்டுள்ளது.