"பீகார் பெண்களுக்கு மோடி, நிதிஷ் என இரு சகோதரர்கள் உள்ளனர்" - பிரதமர் மோடி

Update: 2025-09-27 03:21 GMT

பெண்கள் முன்னேறும் போது முழு சமூகமும் முன்னேறுகிறது என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பீகார் பெண்களுக்கு இனி மோடி நிதிஷ் என்ற இரண்டு சகோதரர்கள் இருப்பதாக பேசியுள்ளார். பீகார் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா 10 ஆயிரம் வீதம் நேரடியாக காணொளி காட்சி வாயிலாக செலுத்திய பிரதமர் மோடி, ஆர்ஜேடி ஆட்சியின் போது பீகாரில் நிலவிய பயங்கரவாதத்தை நினைவில் கொள்ளுமாறும், ஆனால் தற்போது பெண்கள் பீகாரில் பாதுகாப்பாக உணர்வதாகவும் தெரிவித்தார். அதோடு, ஆர்ஜேடி கட்சி மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்