பாக். பெயர் ஜெர்சியில் இடம்பெறும் - பிசிசிஐ விளக்கம்
- ஐசிசி உறுதி செய்த லோகோதான் ஜெர்சியில் இடம்பெறும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம் அளித்துள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர் இடம்பெறாது என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இதற்கு பாகிஸ்தான் வாரியம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஜெர்சி சார்ந்த அனைத்து ஐசிசி விதிமுறைகளையும் தாங்கள் பின்பற்றுவதாக பிசிசிஐ செயலாளர் சைகியா விளக்கம் அளித்துள்ளார்.
- மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவில் பங்கேற்க கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்வது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என சைகியா தெரிவித்தார்.