கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய முடியாது என கேரள உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேரள வங்கியில் பெற்றிருந்த கடனை தள்ளுபடி செய்வதாக மாநில அரசு அறிவித்த நிலையில், தேசிய வங்கிகளில் உள்ள கடனையும் தள்ளுபடி செய்ய இயலுமா? என கேரள உயர் நீதிமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்த நிலையில் மத்திய அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.