பிரபல தியேட்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - என்ன காரணம்?.. எந்த தியேட்டர் தெரியுமா?
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விளம்பரங்களை ஒளிபரப்பியதற்காக PVR திரையரங்கிற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவரை 30 நிமிடங்கள் விளம்பரங்களை பார்க்க கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ள ஆணையம், திரைப்பட அனுபவம் மகிழ்ச்சியளிக்க வேண்டியது, விரக்தியூட்டும் அனுபவமாக இருக்கக்கூடாது என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.