"உனக்கு எவன் குடுத்தான் அதிகாரம்.." - ரேபிடோவை மடக்கி பிடித்து மிரட்டும் ஆட்டோ டிரைவர்கள்.. வைரல் வீடியோபுதுச்சேரியில் ரேபிடோ தனியார் இருசக்கர வாகன ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டுவதாக, வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக ஓலா, உபர் மற்றும் ரேபிடோ போன்ற தனியார் வாடகை கார் மற்றும் பைக் சேவை மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், பல்வேறு இடங்களில் தனியார் செயலிகள் மூலம் இயங்கும் வாடகை கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர்களை மடக்கிப்பிடித்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.. அந்த வகையில், புதுச்சேரியில் ரேபிடோ தனியார் செயலி மூலம் இருசக்கர வாடகை வாகனத்தில் சுற்றுலா பயணியை ஏற்றிச் சென்ற ஓட்டுநரை, ஆட்டோ ஓட்டுநர்கள் மடக்கிப் பிடித்து மிரட்டுவதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது...