கன்னட மொழியில் பேச மறுத்து வங்கி மேலாளர் வாக்குவாதம்
பெங்களூருவில் அரசு வங்கியில் பணிபுரியும் மேலாளர் ஒருவர், கன்னட மொழியில் பேச மறுத்து வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தாபுரா பகுதியில் உள்ள வங்கியில், வாடிக்கையாளர் ஒருவர் மேலாளரிடம் தனது கணக்கு தொடர்பான சந்தேகங்களை கேட்க முயன்றுள்ளார். அப்போது மேலாளர் கன்னட மொழியில் பேச மறுத்து, ஹிந்தி பேச அறிவுறுத்தி வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.