விஷவாயு தாக்கி மூவர் பலி - தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சாய ஆலை நிறுவனத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். சாய ஆலையில் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க தனியார் சாய ஆலை நிறுவனத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.