அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து நூலிழையில் உயிர் தப்பிய மக்கள் - வெளியான அதிர்ச்சி காட்சி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் 5வது மாடியில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதனையடுத்து பால்கனி வழியாக குழந்தைகள், பெண்கள் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து 18 பேரை பத்திரமாக மீட்டனர்.