காஷ்மீரில் புதிய கிரிமினல் சட்டங்கள் அமல் - அமித்ஷா அறிவிப்பு

Update: 2025-02-19 07:09 GMT

ஜம்மு- காஷ்மீரில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லி நார்த் பிளாக்கில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, சட்டங்களை அமல்படுத்துவதில் சில பலவீனமான பகுதிகள் உள்ளதாகவும், அதில் உடனடி கவனம் தேவை என்று சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய சட்டத்தை செயல்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொறுப்பல்ல எனக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்