காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களை சந்திக்க, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று காஷ்மீர் செல்கிறார். தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் செல்லும் ராகுல்காந்தி, காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.