200 அடி பள்ளத்தாக்கில் ஆம்புலன்ஸ் விபத்து - கோரத்தை பார்த்து நடுங்கிய மக்கள்

Update: 2025-09-07 05:56 GMT

பள்ளத்தாக்கில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் (Hoshiarpur) மாவட்டம் சிந்த்பூர்ணி (Chintpurni) மலைப்பாதையில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில், 3 பேர் பலியாகினர். காங்க்ரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து லூதியானா பகுதிக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற இந்த ஆம்புலன்ஸானது, திடீரென கட்டுப்பாட்டை இழுந்து, 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில், மேலும் 2 பேர் படுகாயங்களுடன் ஷாத்பூரில் (Shadpur) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்