லடாக்கிலிருந்து சீறிய ஆகாஷ் ஏவுகணை.. துல்லிய தாக்குதல்..

Update: 2025-07-17 02:48 GMT

15,000 அடி உயரத்தில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை

லடாக் பகுதியில் 15 ஆயிரம் அடி உயரத்தில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை அமைப்பை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த அமைப்பை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து இந்திய ராணுவம் இந்த சோதனையை மேற்கொண்டது. அப்போது அதிக உயரத்தில் மிக வேகமாக நகர்ந்த விமானங்களுக்கு எதிராக இரண்டு நேரடி தாக்குதல்களை ஆகாஷ் பிரைம் ஏவுகணை பதிவு செய்தன. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்த அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்