AK 203 | India | கைகோர்த்த ரஷ்யா.. இந்தியாவில் ரெடியாகும் AK-203 - மிரட்டல் சம்பவம் லோடிங்
உத்தரபிரதேசத்தில் ரஷ்யா உடன் இணைந்து AK-203 ரக துப்பாக்கி உற்பத்தி விரைவில் தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதில் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்டார். மேலும், இந்திய ஆயுதப்படை தன்னம்பிக்கையை அடைய விரும்புவதாகவும், அதற்காக வெளிப்புற சார்பு நிலையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.