Agra | MLA எனக்கூறி என்ஜாய் செய்த நபர்.. சொகுசு விடுதியில் வித விதமாக உணவு.. தூக்கிய போலீசார்
உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர் எனக்கூறிக் கொண்டு, சொகுசு விடுதியில் தங்கி, மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர், தன்னை எம்.எல்.ஏ எனக்கூறிக்கொண்டு ஆக்ராவில் உள்ள சொகுசு விடுதியில் 18 நாட்கள்அறை எடுத்துத் தங்கியதோடு மட்டுமல்லாமல், விதவிதமாக உணவை ஆர்டர் செய்து ருசித்து வந்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் விடுதி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வினோத் குமார் தனது காரில் எம்எல்ஏ என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, பல்வேறு பகுதிகளில் ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.