ABVP | Police | கல்லூரியில் விபரீதம்.. மாணவிகள் உடை மாற்றுவதை படம்பிடித்த அதிர்ச்சி
மத்திய பிரதேச மாநிலம் மான்ஸர் பகுதியில மாணவிகள் உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்காங்க...
மத்திய பிரதேசத்தில் அரசு கல்லூரியில் மாணவர்களுக்காக கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மாணவிகள் உடை மாற்றுவதை சில மாணவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில், ஏபிவிபி மாணவர் அமைப்பின் செயலாளர் உமேஷ் ஜோஷி, துணை ஒருங்கிணைப்பாளர் அஜய் கெளர் மற்றும் உறுப்பினர் ஹிமான்ஷு பைராகி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.