புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வில்லியனூர் பகுதியை சேர்ந்த முஜிப் ரகுமான் என்பவர் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள உடைமாற்றும் அறையில் மயங்கி விழுந்து மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் முஜிப் ரகுமான் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முஜிப் ரகுமான் இயற்கையான முறையிலேயே மரமடைந்ததாக கூறி உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்