chain snatch video || பைக்கில் தனியாக சென்ற பெண் - ஓட ஓட கதற கதற செயின் பறிப்பு
chain snatch video || பைக்கில் தனியாக சென்ற பெண் - ஓட ஓட கதற கதற செயின் பறிப்பு - குலைநடுங்க விடும் பகீர் காட்சி
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள சஞ்சப்பா நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண்ணிடம் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை அவர்கள் கீழே தள்ளி விட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துள்ளனர். அந்த பெண் கூச்சலிட்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அந்த பெண்ணிடம் பறிக்கப்பட்ட நகை, கவரிங் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக காட்சிகள், அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது