ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள செனாப் ஆற்றின் நீர்மட்ட அபாய அளவை தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, செனாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால், அருகில் உள்ள கோயில் ஒன்று நீரில் மூழ்கும் சூழலில் உள்ளது. கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள
நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.