வெள்ளத்தில் தத்தளித்தவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் சபரியாற்றில் வெள்ளத்தில் சிக்கியவரை, விமானப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். ஆற்றின் நடுவில் வெள்ளப் பெருக்கில் நிலைகொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நபரை, விமானப்படை வீரர் பாதுகாப்பு கவசத்துடன் கயிறு கட்டி மீட்டார். அதன்பின்னர், அந்த நபருக்கு ஹெலிகாப்டரில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.