பேங்க் உள்ளே புகுந்த கும்பல்... துப்பாக்கி முனையில் கொள்ளை- பதற வைக்கும் காட்சி
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அமைந்துள்ள ஊரக வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருவாவில் அமைந்துள்ள வங்கியில் முகமூடியுடன் நுழைந்த 3 கொள்ளையர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி, லாக்கரில் இருந்த 10.62 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.