"மகேந்திரகிரியில் 7 வினாடி சோதனை வெற்றி" - இஸ்ரோ அறிவிப்பு

Update: 2025-05-27 15:13 GMT

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மேம்படுத்தப்பட்ட விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் செயற்கைகோளை கொண்டு செல்லும் விகாஸ் என்ஜின்களை தயாரிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, விகாஸ் என்று அழைக்கப்படுகின்ற மேம்படுத்தப்பட்ட என்ஜின் பரிசோதனை 7 வினாடிகள் மேற்கொள்ளப்பட்டது.

விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சோதனை வெற்றியடைந்ததாக இஸ்ரோ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்