மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22.06.2025)

Update: 2025-06-22 13:14 GMT
    • முதல்வர் ஸ்டாலினின் வேலூர் பயணத்தையொட்டி, வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை..திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
  • மதுரையில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டும் முருக பக்தர்கள் மாநாடு... மேள தாளங்கள் முழங்க காவடியுடன் நடனமாடி உற்சாகம்..
  • மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்பு
  • ஓமலூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில், எடப்பாடி பழனிசாமிக்கு வேல் வழங்கிய நிர்வாகிகள்...
  • பிறந்தநாள் கொண்டாடும் தவெக தலைவர் விஜய்...அன்புமணி, சீமான், அண்ணாமலை, டிடிவி. தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து...
  • சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்...
  • சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலை பூங்கா அமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு...
  • முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜக சார்பில், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு
  • சண்டிகரில் இருந்து லக்னோ செல்ல இருந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து..
  • அமெரிக்க தாக்குதல் எதிரொலியால் மத்திய கிழக்கு வான்பரப்பை தவிர்க்கும் விமான நிறுவனங்கள்...
  • ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் எதிரொலி...
  • முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வான்பரப்பு மூடப்படுவதாக இஸ்ரேலிய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு...
  • அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கி...
  • கோர்ராம்ஷஹர்-4 (Khorramshahr-4) என்ற மிகப்பெரிய ஏவுகணை மூலம் இஸ்ரேலை குறிவைத்து தாக்கியதாக ஈரான் தகவல்..
Tags:    

மேலும் செய்திகள்