10 நாட்களில் 5 பாலியல் வன்கொடுமை - அச்சத்தில் ஒடிசா மக்கள்
ஒடிசா மாநிலத்தில், கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து 5 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி இருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தின் கரஞ்சாய் பகுதியில், கோயிலில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்ணை, வனப்பகுதிக்கு கடத்திச்சென்ற 3 பேர் கொண்ட கும்பல் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் கோபால்பூர் கடற்கரையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து பதிவாகி வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அனைத்து வழக்குகளிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.