ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4.5 டன் மாம்பழங்கள் அழிப்பு

Update: 2025-06-21 02:56 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உள்ளிட்ட பல இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழக்கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாம்பழம் மற்றும் பிற பழங்களை கெமிக்கலை பயன்படுத்தி ஸ்பிரே மூலம் பழுக்க வைப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், திண்டிவனம் நேரு வீதியில் சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கெமிக்கல் ஸ்பிரே மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நாலரை டன் மாம்பழத்தை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவற்றை பினாயில் மூலம் அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்