ரயில் மோதி 3 யானைகள் உடல் நசுங்கி உயிரிழப்பு

Update: 2025-07-18 16:11 GMT

மேற்குவங்க மாநிலம் ஜார்கிரகம் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தோலா பகுதியில் நேற்று இரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் இரண்டு யானை குட்டிகள் உட்பட மூன்று யானைகள் உடல் நசுங்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தை கடக்க முயலும் விலங்குகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்